• Jul 26 2025

முன்னாள் கணவரின் தம்பிக்காக சமந்தா செய்த காரியம் என்ன தெரியுமா?ஷாக்கான ரசிகர்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா முன்னணி நடிகையாக நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடன் நடித்த தெலுங்கு திரையுலகின் வாரிசு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். 

சில வருடங்கள் மட்டுமே நீடித்த அவர்களது இல்லற வாழ்க்கை இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார். நாகசைதன்யா உடன் நான்கு ஆண்டு இணைந்து வாழ்ந்த சமந்தா திடீரென விவாகரத்தை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதன்பின் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிட்ஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா தற்போது தான் அதிலிருந்து மீண்டு பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளார்.

விறுவிறுப்பாக அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். இதனால் சமந்தாவின் ரசிகர்களுக்கு ஆவலுடன் சமந்தாவை திரையில் காண காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், தனது முன்னாள் கணவரின் தம்பியும், சமந்தாவின் மைத்துனருமான நடிகர் அகில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சமந்தா. இதை பார்த்த ரசிகர்கள் ஆச்சிரியப்பட்டுள்ளனர்.

அகில் நடிப்பில் உருவாகி வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரவிருக்கும் திரைப்படம் ஏஜென்ட். இப்படத்திற்காக தான் அகிலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement