• Jul 24 2025

பிரபல ஹோட்டலில் உணவருந்திய சரத்குமார்- சாப்பிட்டு முடித்துவிட்டு என்ன சொன்னார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் இருநது பிரபல்யமான நடிகராக வலம் வருபவர் தான் சரத்குமார். இவர் நடிப்பில் வெளியாகிய சூர்யவம்சம், நாட்டாமை, நட்புக்காக உள்ளிட்ட படங்கள் எவர்க்ரீன் க்ளாசிக் படங்களாக கொண்டாடப்படுகின்றன

அண்மையில் இவர் வானம் கொட்டட்டும், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில்  நடித்தார்.அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.


தற்போது வாரிசு, தி ஸ்மைல் மேன், பரம்பொருள் & நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிப்பதைத் தவிர அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சரத்குமார் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 


அதில், " இன்று காலை, K.S.ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகிவரும் #HitList திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு செல்கின்ற வழியில், நந்தம்பாக்கம், TradeCentre அருகில் உள்ள அடையாறு ஆனந்த பவன் (A2B) உணவகத்தில் சிற்றுண்டி அருந்திய போது அங்கு பணியாற்றும் சகோதர, சகோதரிகளை சந்தித்து உரையாடி மகிழ்ந்தேன்" என பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement