• Jul 26 2025

ஈழத்தமிழர்களுக்காக சத்தியராஜ் மகள் என்ன செய்கிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முக திறமைகளை காட்டியவர் சத்யராஜ். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் கலக்கி இருக்கின்றார். ஹீரோவாக மட்டுமன்றி வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்திருக்கின்றார். 

மேலும் சத்யராஜ் இப்போதும் நல்ல கதாபாத்திரம் உள்ள படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேசமயத்தில் சமூக பிரச்சனைகள் குறித்தும் எப்போதும் தனது கருத்தை தைரியமாக தெரிவிப்பார், அதனால் சில பிரச்சனைகளையும் இவர் சந்தித்து வருவது வழமை.


இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ், திவ்யா சத்யராஜ் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில் சிபிராஜ் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்பதை நாம் அறிவோம். திவ்யா சத்யராஜ் சமூக சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.


இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தனது மகள் குறித்து பெருமிதமாக பேசியுள்ளார்.அவர் கூறியதாவது..

" பசுமைப்பள்ளி, பசுமைசமுதாயம் திட்டத்தில் ஈழத்து செல்வா பேத்தியுடன் என் மகள் இணைந்து செயல்படுவார் என்றும், ஈழத்தமிழர்களின் நலனுக்காக என்றும் உழைப்பார் " என்றும் கூறியுள்ளார். சத்யராஜ் தனது மகள் குறித்து தெரிவித்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. 

Advertisement

Advertisement