• Jul 23 2025

நடிகர் அஜித் வாங்கிக் கொடுத்த காரையும் பைக்கையும் எஸ்.ஜே சூர்யா என்ன செய்தார் தெரியுமா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  பாரதி ராஜாவின் உதவி இயக்குநராக இருந்து அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான்  எஸ்.ஜே சூர்யா. இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக மாறினார்.

அதன் பின்னர் விஜய்யை வைத்து குஷி என்னும் படத்தை இயக்கியிருந்தார். இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.இதனைத் தொடர்ந்து "நியூ" திரைப்படத்தின் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கொண்டார்.தொடர்ந்து திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி திரைத்துறையில் கலக்கி வரும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் உருவாகி வருகிறது.


இப்படம் வரும் ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எஸ்.ஜே. சூர்யா "பொம்மை" திரைப் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது "வாலி" திரைப்பட சமயத்தில் அஜித் வாங்கி கொடுத்த கார் மற்றும் பைக் இப்போது எங்கே இருக்கிறது என கேள்வி எழுந்தது.

அதற்கு எஸ்.ஜே.சூர்யா "ஒரு காரின் காலம் 12 வருடங்கள் மட்டும்தான். நான் 3 ஆண்டுகள் அந்த காரை பயன்படுத்தி விட்டு எனது தந்தையின் நண்பருக்கு கொடுத்துவிட்டேன். அஜித் சார் வாங்கி கொடுத்த பைக் எனது நண்பரிடம் கொடுத்துவிட்டேன்".மேலும் எஸ்.ஜே.சூர்யாவிடம் அஜித்தை பற்றி கேட்டதற்கு "அவர் ஒரு தனிமை விரும்பி" என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement