• Jul 26 2025

ஆஸ்கார் விருது வென்ற இயக்குநருக்கு.. பெறுமதியான பரிசு வழங்கி முதலமைச்சர் கௌரவிப்பு.. அப்படி என்ன கொடுத்தார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த மார்ச் 12 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95ஆவது ஆஸ்கர் விருது விழா பிரமாண்டமாக நடைபெற்றது. திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த ஆஸ்கர் விழாவில் சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருது இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட “The Elephant Whisperers” என்ற படத்திற்கு கிடைத்தது. 


இதற்கான ஆஸ்கார் விருதை  இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் பெற்றுக் கொண்டார். இதேபோல் இந்தியாவில்  இருந்து அனுப்பப்பட்ட ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” என்ற பாடல் ஆனது சிறந்த பாடல் பிரிவில் விருது வென்று சாதனை படைத்தது. இவ்வாறு ஆஸ்கர் விருது இந்திய படங்களுக்கு கிடைத்ததை இந்தியா முழுவதும் ஏராளமானோர் கொண்டாடினர்.  


இந்நிலையில் தற்போது “The Elephant Whisperers" ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸூக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்து இருக்கின்றார்.


Advertisement

Advertisement