• Jul 25 2025

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாதியை பார்த்த ரசிகர்கள் என்ன தெரிவித்திருக்கிறார்கள் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இன்றைய தினம் பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.பெரிய பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி த்ரிஷா ஐஸ்வர்யா ராய் எனப் பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.

அந்த வகையில் இப்படத்தின் முதல் காட்சி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. முதல் பாதி தற்போது முடிந்துள்ளது, பாதி வரை எப்படி உள்ளது என்ற ரசிகர்கள் தமது கமெண்டுகளில் தெரிவித்து வருவதைக் காணலாம்.

முதல் பாதி, என்ன ஒரு அனுபவம். வாவ் என ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு பதிவில், எதிர்பார்த்தபடியே வந்தியத்தேவன் அமர்களப்படுத்தி இருக்கிறார். கார்த்தி அந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். நன்றி மணி சார் என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், “பொன்னியின் செல்வன் வரலாறு படைத்துள்ளது. புத்தகம் படிக்காதவர்களுக்கு கதாபாத்திரம் புரியும் வண்ணம் முதல் பாதி சிறப்பாக எடுக்கப்பட்டு உள்ளது. மணிரத்னம் எப்பவுமே லெஜண்ட் தான். ஏ.ஆர்.ரகுமானின் இசை வெறித்தனமாக இருப்பதாகவும், கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவின் நடிப்பு மிரட்டல் என்றும் பதிவிட்டுள்ளார்.
















Advertisement

Advertisement