• Jul 23 2025

உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய அஜித்- அடுத்த டூர் எப்போது ஆரம்பிக்கவுள்ளார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் பைக் மூலம் இந்தியாவைச் சுற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் முதல்கட்டமாக இமயமலையில் கடந்த ஆண்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். 

பனி படர்ந்த பல்வேறு பகுதிகளில் பைக்கில் நண்பர்களுடன் பயணம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது.தற்போது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் தொடக்க வேலையில் இருப்பதால் 2-ம் கட்ட பைக் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.


 இந்நிலையில் அஜித் தற்போது மீண்டும் உலக சுற்றுலா செல்லவுள்ளார். அஜித் உலக சுற்றுலா செல்லவுள்ள பகுதி குறித்த மேப் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


மேலும் நேபாளம், பூட்டான், மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பயணித்து முடித்து விட்ட இவர் அடுத்ததாக இந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகம் முழுக்க பயணிக்கவுள்ளதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement