• Jul 25 2025

பிக்பாஸ் சீசன் 7 இன் முதல் ப்ரோமோ எப்போது ரிலீஸ் தெரியுமா?- அடடே இதன் லோகோ இது தானா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், ரியாலிட்டி நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' மற்ற அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் சிம்ம சொப்பனம் என கூறலாம். ஒவ்வொரு வாரமும், டிஆர்பியில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு செம்ம டப் கொடுத்து வருவதால்,  பல தொலைக்காட்சிகள் பிக்பாஸ் சமயத்தில், தங்களின் டிஆர்பி-யை தக்க வைக்க வித்தியாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தயாராகிறார்கள்.


அதிலும் கமல்ஹாசன் கலந்து கொள்ளும்,  2 நாட்கள் தான் தாறுமாறாக டிஆர்பியை எகிறவைக்கும். மக்கள் பிரதிநிதியாக நின்று கமல் போட்டியாளர்களை நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்புவது குறித்து பல விமர்சனங்கள் வரும் என்பதால், கமல்ஹாசனே சற்று கூடுதல் கவனத்தோ

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், 7-ஆவது சீசன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளதாகவும், இதில் போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆடிஷனில் கலந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


இப்படியான நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் 7 இற்கான ப்ரோமோ இந்த மாதம் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement