• Jul 23 2025

தளபதி 68 படத்தின் ஷுட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா?- அடடே.... இந்த சர்ப்ரைஸை யாரும் எதிர்பார்க்கலையே..

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்துள்ளன. அதன்படி படத்திலிருந்து வரிசையாக போஸ்டர்கள் வெளியாகின.

 அவை அனைத்துக்குமே ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்தனர். இந்த சூழலில் ஆடியோ வெளியீட்டு விழாவானது செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடப்பதாக இருந்தது.


அதற்காக பாஸ்கள் முதல் மேடைகள் அமைப்பதுவரையிலான ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. விஜய்யின் சமீபத்திய அரசியல் மூவ்கள், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன குட்டி கதை விவகாரம் ஆகியவைகளை எல்லாம் மனதில் வைத்து தளபதி ரசிகர்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். 

 அதிக பாஸ்கள் கோரிக்கை, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை காரணம் காட்டி இந்த விழா நடக்காது என செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்தது, இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  அதாவது விஜய் நடிக்கவுள்ள 68வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.


இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் ஷுட்டிங்கானது அக்டோபர் 3ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ள நிலையில் படத்திற்கான வேலைகளை அவர் ஏற்கனவே துவங்கியுள்ளதாகவும் மூன்று பாடல்கள் ரெடியாக உள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement