• Jul 26 2025

பிக்பாஸ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள டாடா படத்திலிருந்து வெளியாகிய சூப்பர் அப்டேட்-அடடே எப்போது ரிலீஸ் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் கவின்.இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானார். இந்த நிகழ்ச்சியில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவரது நடிப்பில்  'டாடா'என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் கணேஷ் K பாபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் வெளியாகியுள்ள பாடல்கள் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடெக்சன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. 


இந்த நிலையில், படத்தினை உலகம் முழுவதும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.அழகான ரொமாண்டிக் எண்டர்டெயினர் படமான 'டாடா' சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. 


படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் திரையரங்குகளில் வெளியீட்டு தேதி குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும். என்பதும் முக்கியமாகும். மேலும் இப்படத்தில்  K பாக்யராஜ், ஐஸ்வர்யா, 'முதல் நீ முடிவும் நீ' புகழ் ஹரிஷ், வாழ்' புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement