• Jul 25 2025

லவ்டுடே திரைப்பட கதாநாயகி இவானாவின் மாமாக்குட்டி எங்கு இருக்கிறார் தெரியுமா?- இது வரை வெளிவராத ரகசியம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

குறும்படங்களை இயக்கி அதன் மூலம் பட வாய்ப்பை பெற்றவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான லவ் டுடே திரைப்படம் மூலம் தான் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் இயக்கி நடித்த திரைப்படம் தான் லவ்டுடே.

ரிலீசான முதல் நாளில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படத்தை இன்று தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று ரூ.100 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.அத்தோடு இப்படம் தமிழில் மடடுமல்லாது தெலுங்கிலும் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த இவானா பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.அதில் பல விடயங்களை கலந்துரையாடியுள்ளார். அதாவது படத்தில் நடிக்கும் போது இவ்வளவு ரெஸ்போன்ஸ் கிடைக்கும் என்று நினைக்கல ஆனால் இப்போ ரொம்ப சந்தோசமாக இருக்கு எல்லாரும் நிக்கிதா என்றே கூப்பிடுறாங்க அது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றார்.

தொடர்ந்து தொகுப்பாளர் உங்களுக்கு யாரும் மாமா குட்டி என்று யாரும் இருக்கா என்று கேட்ட போது இல்லை அப்படி யாரும் இல்லை அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையல என்று கூறினார்.அத்தோடு எமோஷனல் ஆனால் சமாதானப்படுத்த பாய் பெஸ்டி இருக்கிறாங்க என்றும் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்த படத்தில் ரொமான்ஸ் எல்லாம் வெறும் சீனாத் தான் இருந்திச்சு. பிரதீப் இயக்குநராக இருந்ததால் அவர் ஒரு சீசன் முடிஞ்சவுடனே மொனிட்டர் பார்க்க போய்டுவாங்க அதனால அப்படி ஒன்றும் தோனல என்றார்.


மேலும் எனக்கு தளபதி விஜய்யைத் தான் பிடிக்கும் என்றும் கண்டிப்பாக பொங்கலுக்கு வாரி திரைப்படம் தான் போவேன் என்றும் அதில் கூறியிருந்தார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவானாவின் அம்மா இவானாவின் விருப்பப்படி தான் திருமணம் நடக்கும் என்று கூறி ரசிகர்களை குஷிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement