• Jul 25 2025

மதம் மாறிய சர்ச்சையிலும் கணவருடன் ஜாலியாக மணிமேகலை எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா?- வைரலாகும் போட்டோஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனது திறமையால் சன் மியூசிக் மட்டுமல்லாமல், சன் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார் மணிமேகலை.லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இருவீட்டாரின் சப்போர்ட் இல்லாததால், இவர்கள் இருவருமே கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர். திருமணத்திற்கு பின் விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் ஷோவில் கலந்து கொண்டு ஒரு சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன் முடிந்தநிலையில், மூன்றாவது சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்ட,மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் விலகியதற்கான காரணம் தெரியாததால், அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் பரவின.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள் மணிமேகலை மதம் மாறி விட்டதாக ஒரு செய்தி பரப்பி வருகிறது. மணிமேகலை புர்கா அணிந்திருக்கும் படத்தைப் பகிர்ந்து, எப்படி ஆரம்பிச்சது.. எப்படி முடிஞ்சிருக்கு பாத்தீங்களா.. லவ்_ஜிகாத். மதமென பிரிந்தது போதும் என வலதுசாரி ஆதரவாளர் ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, பதிலளித்துள்ள மணிமேகலை, இப்படி வாழ்க்கை முழுவதும் உளறிக் கொண்டே இருப்பதற்கு, போய் உருப்படுகிற வேலையை பார்க்கலாம் என கூறியுள்ளார்.


மணிமேகலை மதம் மாறிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் காட்டுத்தீ போல பரவிக்கொண்டு இருக்க, எதைப்பற்றியும் கவலைப்படாத மணிமேலை தனது கணவர் ஹூசைனுடன் ஜாலியாக மேட்ச் பார்க்க சென்றுள்ளார். மேலும் ஐபிஎல் கோப்பையுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, ஐபிஎல் டிராபி கோப்பை நம்ம சென்னைக்கு வந்தாச்சு டிராபியை ஜெயிக்கறோம் என பதிவிட்டுள்ளார்.
































Advertisement

Advertisement