• Jul 26 2025

சீரியல் நடிகை பரீனா மகனின் முதலாவது பிறந்தநாளை எங்கே கொண்டாடியுள்ளார் தெரியுமா? நீங்களே பாருங்க

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

பாரதி கண்ணம்மா தமிழ்நாட்டில் இப்போது உள்ள ஹிட் சீரியல்களில் ஒன்றாகும். இதில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தவர் நடிகை பரீனா.


மேலும் இதற்கு முன் இவர் சில சீரியல்கள் நடித்தாலும் பாரதி கண்ணம்மா தான் பெரிய ரீச் கொடுத்தது என்றே கூறலாம். கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்த அவர் சீரியலில் தொடர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் இப்படி ஒரு வில்லியா என அனைவரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னுடைய வில்லத்தனத்தால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர்.


பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்க காரணமே கதை தான் அந்த கதைக்கு ஆரம்ப புள்ளியாக இருந்தவர் தான் வெண்பா என்பதால் பலர் அவருடைய நடிப்பிற்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.


இந்நிலையில் இவர் தனது மகனின் முதல் பிறந்தநாளை துபாயில் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் பகிர ரசிகர்கள் அவரின் மகனுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement