• Jul 25 2025

யுவன் சங்கர் ராஜா பிறந்த சந்தோஷத்தில் இளையராஜா இசையமைத்த பாடல் எது தெரியுமா?- அடடே அதனால தான் அந்த பாட்டு ஹிட்டாகிச்சா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவனாக கிட்டத்தட்ட 70களில் இருந்தே சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர் இசைஞானி இளையராஜா. இவரின் இசைதான் பல நடிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே இருந்திருக்கின்றது. மைக் மோகன் என்று அழைக்கப்படும் நடிகர் மோகன் இந்த அளவுக்கு பெயர் பெற்றதன் காரணமே இளையராஜா இசையமைத்த பாடல்களால்தான்.

மேலும் கமல் , ரஜினி படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கும் ஒரு காரணமாகவும் அமைந்தது இளையராஜாவின் இசைதான். மாறி மாறி இரு நட்சத்திரங்களுக்கும் பாரபட்சம் பாராமல் அழகான இசையில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார் இளையராஜா.


அந்த வகையில் ரஜினியின் ‘ஜானி’ படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அந்தப் படத்தின் இசை ரிக்கார்டிங் ஆழியார் டேமில் நடந்து கொண்டிருந்ததாம். அப்போது இளையராஜா ஆழியார் டேமில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து அதற்கான வேலைகளில் தன்னுடைய உதவியாளர்களை வைத்து செய்து கொண்டிருப்பாராம்.

அப்போது தயாரிப்பாளரான கேயார் அவரது வீடு இருக்கும் கோயம்புத்தூருக்கு அடிக்கடி சென்று வருவாராம். அப்படி வரும் போது இளையராஜாவுக்கு யுவன் சங்கர் ராஜா பிறந்திருக்கிறார். அந்த செய்தியை கேயார் இளையராஜாவிடம் வந்து சொன்னாராம்.


அதை கேட்டு மிகுந்த மகிழ்ச்சியில் இளையராஜா போட்ட இசைதான் ஜானி படத்தில் அமைந்த ‘செனோரீட்டா ஐ லவ் யூ’ என்ற பாடலாம். அந்த பாடலை இப்போது கேட்டாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குதூகலம் தோன்றுவது போல இருக்கும். அந்த அளவுக்கு புத்துணர்ச்சியான பாடல் தான் அது.அது யுவன்சங்கர் ராஜா பிறந்ததும் இளையராஜா போட்ட சாங் டியூன் என இப்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது.


Advertisement

Advertisement