• Jul 24 2025

தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நண்பர்களாக நடிக்கவுள்ள பிரபலங்கள் யார் தெரியுமா? வெங்கட் பிரபு என்ன சொல்லியிருக்கிறார் பாருங்க!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

வெங்கட்பிரபு இப்போது பம்பரமாக சுழன்று கொண்டிருக்கின்றார். தளபதி 68 பூஜை சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தடுத்த வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றது. லியோ ரிலீஸூக்காக காத்திருக்கும் படக்குழு அதன் பிறகு ஒவ்வொரு அப்டேட்டையும் வெளியிட இருக்கின்றனர்.



தளபதி 68  விஜய் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதியாகி இருக்கின்றது. அதில் இளம் வயது விஜய்க்கு பிரபுதேவா மற்றும் பிரசாந்த் இருவரும் நண்பர்களாக நடிக்கின்றனர். அதில் பிரபுதேவா ஒல்லியான உடல் காெண்டவர் என்பதால் விஜய்யின் நண்பர் கேரக்டருக்கு  செட் ஆகிவிடுவார் என ஆனால் பிரசாந்த்  அதிக எடை போட்டு இருக்கிறார். அதனால் இந்த கேரக்டருக்கு சிறு சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. இது குறித்து ஏற்கனவே ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்.


அதை அடுத்து விஜய் ரேஞ்சுக்கு அவரின் உடல் எடையை குறைத்தே ஆகவேண்டும் என வெங்கட்பிரபு  சொல்லிவிட்டாராம். தற்போது 50 வயதாகும் பிரசாந்த் இனிமேல் உடல் எடையை குறைத்து வருவது கடினம் தான். அதனால் இவருக்கு டிஏஜிங் செய்யப் போகிறார்களாம். அந்த வகையில் தளபதி 68 ஒவ்வொரு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது. 

Advertisement

Advertisement