• Jul 25 2025

கதாநாயகி ஷோவில் டைட்டில் வின்னராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் யார் தெரியுமா?- அடடே இவங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


ஸ்டார் விஜய் பல எண்ணற்ற நட்சத்திரங்களை தன் நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்துவைத்ததின் மூலமாக அவர்களை திரைத்துறையிலும் நட்சத்திரங்களாக மின்னவைத்துள்ளது.அவர்கள் தற்போது திரைப்படத் துறையில் பிரபல நட்சத்திர அந்தஸ்துடன் இருந்துவருகின்றனர்.  அவர்களில் சிவகார்த்திகேயன் & சந்தானம் என்று குறிப்பிடலாம் மற்றும் சமீப காலங்களில் பல நகைச்சுவை நடிகர்கள் தீனா மற்றும் புகழ் என பலர் திரையுலகில் சிறந்த திறமைசாலிகளாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர்.

இந்த வரிசையில், தகுதியான பெண் கதாநாயகியை தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘கதா நாயகி’ என்ற புதிய ரியாலிட்டி கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது.நடிப்புத் தொழிலில் அடியெடுத்து வைக்க விரும்பும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். 


அவர்களில் எட்டு முன்னணி போட்டியாளர்கள் கதா நாயகி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பங்கேற்பாளர்களின் ஒருமித்த நோக்கம் ஸ்டார் விஜய்யின் தொடர்  ஒன்றில் பிரபலமான கதாநாயகியாக வேண்டும் என்பதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆனால் நடிப்புத் துறையில் ஒரு நட்சத்திரமாக ஆவதற்கு ஒரு பொதுவான உத்வேகம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

எனவே இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தவும், மதிப்பிடவும் ஒரு உறுதியான மற்றும் உற்சாகமான நடுவர்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்து செயற்பட்டனர்.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. இதில் டைட்டில் வின்னராக இரட்டை சகோதரிகளான ருபீனா மற்றும் ருபிசீனா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement