• Jul 25 2025

முதல் முறையாக AK62 படத்திற்கு இசையமைக்க போகும் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயங்குவதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், கடந்த ஆண்டு லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. பிறகு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருந்த நிலையில், சில காரணங்களால், லைகா புரொடக்ஷன்ஸ் ak62இயக்குநரை மாற்றியதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து , இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் bio-வில் இருந்து ‘AK 62’ என்பதை அதிரடியாக நீக்கம் செய்திருந்தார். தஇன் மூலம் அவர் அஜித்தின் ‘AK 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

ஆகவே  AK62 படத்தை வேறொரு இயக்குநர் தான் இயக்கப்போகிறார். இதில் மகிழ்திருமேனி அஜித்தின் 62-வது படத்தை இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அந்த படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

அந்த்வகையில் , தமிழ் சினிமாவில் சமீபகாலமாக இசையில் கலக்கி வரும் சந்தோஷ் நாராயணன் தான் AK62 படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement