• Jul 24 2025

இனி 'ராஜா ராணி 2' சீரியலில் புதிய சந்தியாவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?- அடடே இவங்க சூப்பர் நடிகையாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில்,     Diya Aur Baati Hum என்கிற இந்தி சீரியலின்... தமிழ் ரீமேக்காக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் 'ராஜா ராணி 2'.

மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் எப்படி, தன்னுடைய பிரச்சனைகளை தகர்த்தெறிந்து, IPS அதிகாரியாக மாறுகிறார் என்பதே இந்த சீரியலின் மைய கரு. முதலில் இந்த சீரியலில் நாயகியாக ஆல்யா மானசா நடித்து வந்த நிலையில் அவர் இரண்டாவது கர்ப்பம் காரணமாக சீரியலில் இருந்து விலக ரியா விஸ்வநாதன் நாயகியாக நடிக்க தொடங்கினார்.


இவர் சந்தியாவாக நடிக்க தொடங்கி ஒரு வருடம் ஆகும் நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதனால் இனி சந்தியாவாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.


அதன்படி ஷு தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தின் சீதை என்ற சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா தான் இனி சந்தியாவாக இந்த சீரியலில் நடிக்கப் போகிறார் என தெரியவந்துள்ளது. போலீஸ் கெட்டப்பிற்கு ஆஷா கவுடா பொருத்தமாக இருப்பார் என்பதால் இனி சீரியல் விறுவிறுப்பாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.



Advertisement

Advertisement