• Jul 25 2025

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இனி வசுந்தராவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?- அடடே இந்த நடிகையா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் தற்பொழுது சூப்பர் ஹிட்டாகவும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பின் மத்தியிலும் ஒளிரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அர்ஜுனின் சூழ்ச்சியால் தமிழ் தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்து சரஸ்வதியுடன் தனியாகச் சென்று விட்டார்.

அத்தோடு புதிதாக கம்பெனியையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றார்.இப்படியான நிலையில் வசுந்தலாவுக்கு வயிற்று வலி வந்த போது சரஸ்வதி தான் அவரைக் காப்பாற்றியதோடு வசு குழந்தை பெற இரத்தம் கொடுத்து உதவியும் செய்தார்.


இதனால் வசுவின் அம்மா சந்திரகலா மனம்மாறி தமிழ் மற்றும் சரஸ்வதியின் நல்ல குணத்தையும் புரிந்து கொண்டுள்ளார். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை அறிய ரசிகர்களும் மிகவும் ஆவலாக உள்ளனர்.

மேலும் இவ்வளவு காலமும் வசுந்தராவாக நடித்து வந்த தர்ஷனா இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு பதிலாக நடிகை சங்கீதா என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் என்ட்ரி கொடுத்துள்ள எப்பிஷோட் இன்றைய தினம் ஒளிபரப்ப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement