• Jul 23 2025

நடிகை இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார் தெரியுமா..? இந்த நபர் தானாம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் இலியானா. அதுமட்டுமல்லாது இவர் தமிழில் 'நண்பன்' என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். அந்த படத்தில் இடம் பெற்ற இருக்கானா இடுப்பிருக்கானா என்ற பாட்டுக்கு இடுப்பை ஆட்டி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.


ஒரு கட்டத்தில் இலியானாவை சினிமா பக்கம் காணவில்லை, அதற்கு பதிலாக எப்போதும் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்ட வண்ணம் இருப்பார். அந்தவகையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டார். இதனையடுத்து ரசிகர்கள் கல்யாணம் ஆகாமல் எப்படி கர்ப்பம் ஆனீர்கள்..? கணவர் யார் எனக் கேட்டு வந்திருந்தனர்.


இதனைத் தொடர்ந்து தன்னுடைய காதலனுடன் மோதிரம் அணிந்திருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார், ஆனாலும் அப்புகைப்படத்திலும் அந்த நபரின் முகத்தைக் காட்டவில்லை.


இந்நிலையில் நடிகை இலியானாவின் கணவர் யார் என்பது குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துள்ளதாகவும், விரைவில் அவரை அறிமுகம் செய்வார் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement