• Jul 26 2025

எதிர் நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு வில்லனாக நடிக்கும் எஸ் கே ஆர் யார் தெரியுமா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இயக்குநர் தருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில்  பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல கமலேஷ், நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். 


சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். கடைசியில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது.

இனி கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? ஜனனி என்ன செய்து போகிறார்? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் என்று சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் ஆதி குணசேகரனுக்கு வில்லனாக எஸ் கே ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் வாசுதேவன். 


இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிதாக டயலாக் இல்லை என்றாலும் இவருடைய உடல் மொழியினால் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.இந்நிலையில் இவரை குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.


 எஸ்கேஆரின் உண்மையான பெயர் வாசுதேவன். இவர் கேரளாவை சேர்ந்தவர். பெயர் சீரியலில் இவர் எப்படி மிகப்பெரிய தொழிலதிபரோ நிஜத்திலும் இவர் பெரிய பிசினஸ்மேன் தான். தற்போது இவர் சென்னையில் செட்டில் ஆகி இருக்கிறார். இவருக்கு நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. இப்படி ஒரு நிலையில்தான் இயக்குநர் திருச்செல்வத்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அவரும் சீரியலில் உங்களை போல ஒரு கதாபாத்திரம் வேண்டும் என்று வாசுதேவனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பிறகு தான் வாசுதேவனும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் வெள்ளி திரையிலும் இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement