• Jul 23 2025

தளபதி 69 படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் தெரியுமா?- இந்த அப்டேட் வேற லெவலில் இருக்கே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.300 கோடி பட்ஜெட் உருவாகியுள்ள இப்படம் முதல் நாளிலேயே ரூ. 148 கோடி வரை வசூலித்திருந்தது.

முதல் வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 400 கோடி மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.இப்படம் இனி வரும் நாட்களிலும் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்று ரசிகர்களால் நம்பப்படுகின்றது.


இப்படத்தை தொடர்ந்து AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகி பாபு ,லைலா, சினேகா என பல நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர்.

படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆயுத பூஜை அன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

 இந்த படத்தை தொடர்ந்து விஜய்யின் 69வது படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement