• Jul 25 2025

96 பட இயக்குநரின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இணைந்த பிரபல நடிகர்-ஹுரோயின் யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2018  ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 96. ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. 

காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்தது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.


ஆனால் அதே படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது படுதோல்விப் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான பிரேம்குமார் தன்னுடைய அடுத்த படத்திலும் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி செய்து கதை சொன்னார் . அந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் தற்போது ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இப்போது அதே கதையை கார்த்தியை நடிக்க வைத்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்காக இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement