• Jul 25 2025

'காந்தாரா' படத்தைப் போன்று தமிழில் உருவாகும் புதிய படம்... ஹீரோ யார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கன்னடத்தில் வெளியாகி இந்தியளவில் வரவேற்பை பெற்ற படம் தான் காந்தாரா'. இப்படமானது மாபெரும் வசூல் சாதனையையும் நிகழ்த்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு அதன் மூலமாக லாபம் அடைந்தனர்.


இதனையடுத்து 'காந்தரா' படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்த ரிஷப் ஷெட்டியை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் வனப்பகுதியில் வசிக்கும் மக்களின் காவல் தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராகி இருந்தது. 


இந்நிலையில் 'காந்தாரா' படம் சாயலில் குலதெய்வ வழிபாட்டை மையமாக வைத்து தமிழில் புதிய பக்தி படம் ஒன்று தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் இதில் கதாநாயகனாக நடிகர் ஆதி நடிக்கிறார். அத்தோடு எம்.பி.கோபி டைரக்டு செய்கிறார். இப்படமானது அதிரடி சண்டை படமாக தயாராகிறது. 


அதுமட்டுமல்லாது டெல்லி பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசைமைக்கஉள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. அத்தோடு படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement