• Jul 25 2025

பழம் பெரும் நடிகர் நம்பியாரின் மகன் யார் தெரியுமா.?- இப்படியொரு வேலை செய்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் குழந்தைகளை கூட பயமுறுத்திய வில்லன் நடிகர் என்றால் அது நம்பியார் தான்.இப்போது வரை இவரது புகழ் மட்டும் குறையவே இல்லை, எம்ஜிஆர் மற்றும் நம்பியார் இருவரின் படம் என்றால் மக்கள் திருவிழா போல தான் கொண்டாடி வந்தார்கள்.என்னதான் சினிமாவில் வில்லனாக இருந்தாலும் கடவுள் பக்தி உடையவர் நம்பியார்.


திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார். சுமார் அறுபது ஆண்டுகாலம் நம்பியார் தன் சினிமா வாழ்க்கையை நல்ல படியாக வாழ்ந்து வந்தார்.


கேரளாவைச் சேர்ந்த இவர் தனது வாழ்க்கையில் என்ன தான் ஒரு நிலை வந்தாலும் தன் தன்மானத்தை மட்டும் விட்டு கொடுத்ததே இல்லை என்பது தான் உண்மை, இவர் தன் உறவுக்காரப் பெண்ணான றுக்குமணி என்பவரை பெரியோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இதன் பின்னர் தான் மோகன்,சுகுமார் என்ற ஆண் குழந்தையும் சினேகா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.மொத்த நம்பியாருக்கு மூன்று வாரிசுகள் மட்டும் தான்,


ஆனால் தற்போது நடிகர் நம்பியாரின் மகன் சுகுமார் ஒரு நடிகராக தான் இருப்பார் என்று  அனைவருமே நினைத்தார்கள், ஆனால் சுகுமார் ஒரு பிரபலமான அரசியல் கட்சியில்இருந்தார். பின்னர் இராணுவத்திலும் நுழைந்தார்.இப்போது நம்பியாரின் மகன் புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பேசப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது,




Advertisement

Advertisement