• Jul 26 2025

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- வெளியாகிய முக்கிய அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய்டிவியில் பிரமாண்டமாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் 5 சீசன்கள் முடிவடைந்து விட்டது. 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான முதல் புரமோவும் வெளியாகி விட்டது.

மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக பிபி ஜோடிகள் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.இந்தநிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் ராஜு தொகுத்து வழங்க ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் நடுவர்களாக இருந்தார்கள்.


மொத்தம் 8 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அமீர்-பாவ்னி, அபிஷேக்-ஸ்ருதி, ஆர்த்தி-கணேஷ், தாமரை-பார்த்தசாரதி, சுஜா-சிவகுமார், ஐக்கி பெர்ரி-தேவ், வேல்முருகன்-இசைவாணி, டேனி-ரம்யா என 8 ஜோடிகள் பங்குபெற்றார்கள்.

இந்த 2வது சீசனில் இறுதி நிகழ்ச்சி 2 நாட்களுக்கு முன் படப்பிடிப்பு செய்துள்ளார்கள். நமக்கு கிடைத்த தகவல்படி இந்த பிக்பாஸ் 2வது சீசனில் பாவ்னி-அமீர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்களாம். இதனால் அவரது ரசிர்கள் குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement