• Jul 26 2025

குட்டிக் குழந்தையாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா..? அடடே அவங்க இப்போ 2குழந்தைகளுக்கு அம்மா ஆச்சே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பல நடிகர், நடிகைகளும் காலத்திற்கு காலம் அறிமுகமான வண்ணம் தான் இருக்கின்றார்கள். அதில் ஒரு சிலரைப் பொறுத்த வரையில் படங்களில் நடிக்கும் போது மக்கள் மனங்களில் நிலையான ஒரு இடத்தினைப் பிடித்து இருப்பார்கள். ஆனால் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்ததும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுவார்கள். 


அப்படியான நடிகைகளில் ஒருவர் தான் சரண்யா மோகன். இவர் பல படங்களிலும் ஹீரோக்களின் உடைய தங்கையாக நடித்து பல்லாயிரக்கணக்கான ரசிகர் மனங்களைக் கொள்ளை கொண்டவர். அதிலும் குறிப்பாக இவர் விஜய்யுடன் இணைந்து நடித்த 'வேலாயுதம்' படம் யாராலும் மறக்க முடியாது. 


அப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தன்னுடைய குழந்தைத்தனம் வாய்ந்த அழகினாலும், நகைச்சுவைப் பாணியிலும் அசத்தி இருந்தார். பெரும்பாலும் தங்கை கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த சரண்யா மோகன் 'கோலாகலம்' என்ற படத்தின் வாயிலாக ஹீரோயினாகவும் நடித்து இருக்கின்றார்.


இவ்வாறாக பல வழிகளிலும் தன்னுடைய நடிப்பினை திறமையை வெளிப்படுத்தி வந்த சரண்யா மோகன் திருமண பந்தத்தில் இணைந்தமையைத் தொடர்ந்து சினிமாப் பக்கம் தலை வைத்துக்கூடிப் பார்ப்பதில்லை. தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சந்தோசமாக தனது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றார்.


இந்த நிலையில் தற்போது சரண்யா மோகனின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது அவரின் சிறுவயதுப் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.


இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களின் ஊடாக வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement