• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் முதல் முதலாக யாரைச் சந்தித்துள்ளார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கியது. முதல் வாரம் 20 நபர்கள், அதன்பின்னர் மைனா நந்தினி என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, இந்த வாரம் 50 நாட்களை கடந்துள்ளது.

இதனை செலிப்ரேட் செய்வதற்காக நேற்று பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்க்கு கேக் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார்.


இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் அசல் கோலாறை சந்தித்திருக்கின்றார். இது குறித்த புகைப்படத்தை அசல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 


மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டரிடம் பேசிய கமல், "உங்கள் மீது நிறைய நம்பிக்கை வைத்திருந்தேன், கடைசி வர போட்டியில் இருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன்" எனக் கூறி பயண வீடியோ போட்டு வெளியே அனுப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement