• Jul 25 2025

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் குட்டிக் குழந்தை யார் தெரியுமா..? தற்போதுள்ள முக்கிய பிரபலங்களில் ஒருவர் தான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரைத் தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அதாவது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

அந்தவகையில் விஜய் தொலைக்காட்சியில் தனது பள்ளி பருவத்தில் இருந்து இன்று வரை தொகுப்பாளராக பணிபுரிந்து இருக்கின்றார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர்' போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.


சின்னத்திரையிலிருந்து தற்போது வெள்ளித்திரைக்கு தாவியுள்ள தொகுப்பாளினியும், நடிகையுமான டிடிக்கு ஸ்ரீகாந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்று விவாகரத்தும் நடந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். விவாகரத்தின் பின் தற்போது தனியாக தனது அம்மாவுடன் வசித்து வருகின்றார். டிடிக்கு ஒரு சகோதரியும் இருக்கின்றார்.


அந்தவகையில் மேலுள்ள புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் அக்கா பிரியதர்ஷினி தான். ஆம், இவர் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'தாவணி கனவுகள்' என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

இதன்பின்பும் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பிரியதர்ஷினி சின்னத்திரையில் தொகுப்பாளினியாக மாறினார். மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement