• Jul 24 2025

சூப்பர் ஸ்டார் பக்கத்தில் இருக்கும் இந்த நபர் யார் தெரியுமா.. முக்கிய பிரபலம் ஒருவரின் தம்பி தான்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் முன்னணி நட்சத்திரங்களினுடைய அன்ஸீன் புகைப்படங்கள் பலவும் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக நடிகர், நடிகைகளின் சிறுவயதுப் புகைப்படங்கள், திருமணப் புகைப்படங்கள் எனப் பலவும் வெளியாகி வைரலாகி இருந்தன.


இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் போஸ்டருடன் பிரபலம் ஒருவர் எடுத்துக்கொண்ட ஒரு அரிய வகைப்புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. அந்தப்  பிரபலம் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவின் உடைய பிரபல நடிகரும், நடன இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் தான்.


ரஜினிகாந்தின் போஸ்டர் பக்கத்தில் நின்று எல்வின் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் இணைத்து குசேலன் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்.


மேலும் எல்வின் தற்போது கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ஹீரோவாக தன்னுடைய அறிமுக படத்தில் நடித்து வருகிறார் என்பதும், ஏற்கனவே காஞ்சனா 2 படத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டுமே தனது அண்ணனான லாரன்ஸுடன் இணைந்து நடனம் ஆடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement