• Jul 25 2025

எதிர்நீச்சல் சீரியலில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா? அட இவங்களா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். தமிழ்நாட்டில் நம்பர் 1 சீரியல்கள் என TRPல் சாதனை படைத்துள்ளது.

திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில் மாரிமுத்து, மதுமிதா, கனிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் மதுமிதா என்பவர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். நடிகை மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் தான் தமிழில் முதல் சீரியல் ஆகும்.

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் கதாநாயகி ஜனனி ரோலில் நடித்து வரும் நடிகை மதுமிதா, முதன் முதலில் இந்த ரோலில் நடிக்க தேர்ந்தெடுக்கபடவில்லையாம்.

அவருக்கு முன் பிரபல சின்னத்திரை நடிகை ஆஷிகா என்பவர் தான் இயக்குனரின் சாய்ஸ் ஆக இருந்தாராம்.

ஆனால், சில காரணங்களால் ஆஷிகாவால் இந்த சீரியலில் நடிக்க முடியாமல் போக அதன்பின் தான் மதுமிதா இந்த ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை ஆஷிகா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement