• Jul 23 2025

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலிருந்து முதலாவதாக எலிமினேட் ஆகவுள்ள போட்டியாளர் யார் தெரியுமா?- இதை யாரும் எதிர்பார்க்கலையே

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 ஆனது அக்டோபர் மாதம் 1ம் தேதி மிகவும் பிரமாண்டமாக அறிமுகமானது.ஆரம்பித்த நாளிலிருந்து போட்டியாளர்கள் தமக்குள் அடிக்கடி மோதலில் ஈடுபட்டும் வருகின்றனர். செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என பல சர்ச்சைக்குரிய வசனங்களையும் பேசி வருகின்றனர்.

இது தவிர ஜோவிதாவுக்கும் விசித்திராவுக்கும் இடையில் படிப்பு பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.இதனால் முதல் வாரத்திலேயே அத்தனை பஞ்சாயத்தா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.


 மேலும் கமல் வார இறுதியில் வந்தால் என்ன பேச போகிறார் என்றும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த வாரம் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். பிரதீப், யுகேந்திரன், ஜோவிகா உள்ளிட்டோர் லிஸ்ட்டில் இருக்கும் நிலையில் முதல் வாரமே வெளியே போகப்போவது யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

பதிவாகியிருக்கும் வாக்குகளில் தற்போது குறைந்த அளவு வாக்குகள் பெற்று இருப்பது அனன்யா ராவ் தானாம். அதனால் அவர் வெளியேறவே அதிகம் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement