• Jul 24 2025

Ticket to Finale டாஸ்க்கில் வெற்றி பெற்று முதலாவது பைஃனலிஸ்ட்டான போட்டியாளர் யார் தெரியுமா?- செம குஷியான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பைனலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே எஞ்சி உள்ளதால், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் Ticket to Finale (TTF) டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெல்லும் போட்டியாளருக்கு நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

இதற்காக இந்த வாரம் முழுக்க ஏராளமான டாஸ்க்குகள் அடுத்தடுத்து நடத்தப்படும் இதன் இறுதியில் யார் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கிறாரோ அவர்தான் இந்த TTF டாஸ்க்கின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் எனக் கூறப்பட்டது.


 இதில் பெரும்பாலும் உடல் வலிமையை சோதிக்கும் டாஸ்க்குகள் தான் அதிகளவில் கொடுக்கப்படும். அப்படி இதுவரை நடந்து முடிந்த டாஸ்க்குகளில் அசீம் பெரும்பாலான டாஸ்க்குகளில் தோல்வியை தழுவிவிட்டார். 

இவரைப் போல Ticket to Finale டாஸ்க்கில் விக்ரமனும் பைனலுக்கு தகுதி பெறுவார் என்ற கருதப்பட்ட நிலையில் தற்பொழுது இருவரும் இப்படி டாஸ்க்குகளில் கோட்டைவிட்டு வருவதால் அவர்களது ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.


அந்த வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் வீட்டில் அனைத்து டாஸ்குகளிலும் சரியாக விளையாடி முதல் பைஃனலிட்ஸாக தேர்வாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் அமுதவாணன் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement