• Jul 26 2025

இன்னொருவரால் கர்ப்பமான பெண்ணை தானே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர் சதீஷ்.. எதனால் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் பிரபல நடிகரும், இயக்குநருமான சதீஷ் கவுசிக்கின் இழப்பு திரையுலகிலேயே ஒரு பேரிழப்பாக அமைந்திருக்கின்றது. அந்தவகையில் இவர் குருகிராமில் இருக்கும் நண்பரை சந்திக்க சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். 66 வயதான சதீஷுக்கு சசி என்கிற மனைவியும், 11 வயது மகள் வன்ஷிகாவும் இருக்கிறார்கள். 


இவரின் இழப்பையடுத்து அவரின் தாராள குணம் பற்றி தற்போது பலராலும் பேசப்படுகிறது. அதாவது பிரபல பாலிவுட் நடிகையான நீனா குப்தா மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான விவியன் ரிச்சர்ட்ஸால் என்பவரால் கர்ப்பமானார். திருமணமாகாத நீனா கர்ப்பமான செய்தி அவருடன் நெருக்கமான ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அதில் நீனாவின் நெருங்கிய நண்பரான சதீஷ் கவுசிக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கு சதீஷ் கவுசிக்கோ "திருமணமாகாத பெண் கர்ப்பமானால் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகையால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். அந்த குழந்தைக்கு நான் தான் அப்பா என ஊர் உலகிற்கு அறிவிக்கிறேன். நீ கவலைப்படாதே" என்று நீனா கூறியிருக்கிறார். 


மேலும் இது தொடர்பாக முன்னர் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் சதீஷ் கூறுகையில் "குழந்தை கருப்பாக பிறந்தால் கவலைப்படாதே. நாம் திருமணம் செய்து கொள்வோம். அது என் குழந்தை என்று சொல்லிவிடு. யாருக்கும் சந்தேகம் வராது என்று நீனாவிடம் கூறினேன். 1975-ஆம் ஆண்டில் இருந்து நானும், நீனாவும் நண்பர்களாக மட்டுமே இருந்து வந்தோம். நீனா தனியாக இருக்கக் கூடாது என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தேன்" என்றார்.


அதுமட்டுமல்லாது "நாம் தனியாக இருக்கிறோமே என நீனா குப்தா நினைக்கக் கூடாது என்பதே என் கவலை. அக்கறை, மரியாதை, ஆதலால் தான் கல்யாணம் பண்ண நான் முன் வந்தேன். நான் இருக்கேன், நீ ஏன் கவலைப்படுகிறாய் என்றேன்" எனவும் கூறியுள்ளார்.

சதீஷ் கவுசிக் இறந்தாலும் அவரின் இந்த தாராள மனசைப் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement