• Jul 26 2025

18வருஷம் நான் நடிக்கல... ஏன் தெரியுமா..? 5ரூபா பிரியாணி நடிகர் காக்கா கோபால் பகிர்ந்த தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் விதம் விதமான திறமைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக நடிப்பை தாண்டி அவர்களுக்கு பாடல் பாடுவது, இசையமைப்பது படம் தயாரிப்பது போன்ற திறமைகள் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் இதெல்லாம் இல்லாம வித்தியாசமான திறமைகள் உள்ள மனிதர்களும் நிறையப்பேர் உள்ளனர்.

அதாவது ஒரு காமெடியில் நடிகர் விவேக் காக்கா பிரியாணி உண்ட பிறகு அங்கு வரும் மனிதர் காக்கா பிரியாணி சாப்பிட்டா காக்கா சத்தம் வராம உன்னி கிருஷ்ணன் குரலா வரும் என கேட்பார் அல்லவா!. அவர்தான் நடிகர் காக்கா கோபால்.


இவர் வெகு காலமாகவே தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்சமயம் பேட்டியில் பேசிய இவர் வித்தியாசமான தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார். 

அதாவது தான் 15 தொடக்கம் 18 வருஷமாக நடிக்காமல் இருந்ததாக அவர் தெரிவித்திருக்கின்றார். அந்தவகையில் "ஒரு திரைப்படத்தை இயக்கலாம் என்று நினைத்து பண்ணினேன், ஆனால் எந்தத் தயாரிப்பாளரும் எனக்கு கிடைக்கவேயில்லை,  சின்ன வயசில் நான் ட்ரெயிலர் வேலை பார்த்தேன், எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சரி இந்த ட்ரெய்லர் வேலை செய்யக்கூடாது சினிமா தான் என நினைத்தேன், முயற்சி செய்திட்டே தான் இருந்தேன், ஆனால் எனக்கு தயாரிப்பாளர் ஒரு காலகட்டத்தில் கிடைக்கவேயில்லை, அதில நான் தோற்றுவிட்டேன்" என்றார்.


"இதனையடுத்து ஒரு முடிவெடுத்தேன் இனி அந்தப் பக்கம் எல்லாம் போகக் கூடாது, இனிமேல் நமக்கு நடிப்பு மட்டும் தான்" என்றார். மேலும் "நான் என்னுடைய சொந்தக் கதையை தான் முதலில் கதையாக எழுதியிருந்தேன், பிறகு அதை நண்பர்கள் கேட்டதும் கொடுத்துவிடுவேன்" எனவும் கூறியுள்ளார்.

"அந்தக் கதைக்கு 16வயதுப் பையன் தான் ஹீரோ, அதனால் ரொம்ப செலவாகும் என்று நினைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் என் படத்தை தயாரிக்க ஒத்துக்குவே இல்லை" என்றார். 

Advertisement

Advertisement