• Jul 24 2025

ரஜினி தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் ஏன் கொண்டாடுவதில்லை தெரியுமா? அட கொடுமையே!.. இதுதான் காரணமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் இயக்குநர் நெல்சன் இயக்கிய ஜெய்லர் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தற்சமயம் வெளியாகி இணையங்களில் வைரலாகி வருகிறது. நிறைய தோல்வி படங்களை அடுத்தடுத்து கொடுத்த ரஜினிகாந்த்க்கு இந்த படமாவது வெற்றி படமாக அமையுமா என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் எல்லா நடிகர்களும் நடிகைகளும் தனது பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாக தனது ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள், இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் இன்றளவும் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவதில்லை. பிறந்தநாள் வரும் சமயங்களில் எல்லாம் இமயமலை மற்றும் இதர சுற்றுப்பயணங்களில் தனது பிறந்த நாளை தவிர்த்து வருகிறார். இதன் மூலம் நிறைய ரசிகர்களும் ஏன்..?? எதற்காக..?? இப்படி ரஜினிகாந்த் அவர்கள் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடுவதை தவிர்த்து வருகிறார். என்று குழப்பம் அடைந்து வருகிறார்கள் இதற்கு காரணம் இதுதான்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது பிறந்த நாளை தனது ரசிகர்களுடன் கொண்டாடிய ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.அந்த நேரத்தில் மூன்று ரஜினி ரசிகர்கள் ஒரு விபத்தில் உயிரிழந்தார்கள். இதனை அறிந்த ரஜினிகாந்த் மிகுந்த மனம் உடைந்து இனிமேல் தனது பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். இதன் காரணமாகவே தனது பிறந்த நாளை இன்றளவும் தனது ரசிகர்களுடன் கொண்டாட மறுத்துவிட்டார்.

இதனை அறிந்த ரசிகர்கள் ரஜினிகாந்த் அவர்கள் தனது ரசிகர்கள் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறாரா..?? என்று ஆச்சரியப் பட்டு இருக்கிறார்கள்.மேலும் ரஜினி ஒரு இரக்கம் மிகுந்த ஒரு நடிகர் ஆவார்.


Advertisement

Advertisement