• Jul 24 2025

கையில் அம்புடன் மிரட்டல் கோலத்தில் 'எதிர்நீச்சல்' ஜான்சிராணி... எதனால் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருகின்றனர். கதை மட்டுமன்றி கதாபாத்திரங்களின் நடிப்பும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.


அந்தவகையில் இந்த சீரியலில் மிரட்டும் கதாபாத்திரமாக ஜான்சி ராணி ஜொலிக்கின்றார். இந்த வேடத்தில் காயத்ரி கிருஷ்ணன் என்பவர் நடிக்கின்றார். அதாவது குணசேகரன் வீட்டு மருமகனான கரிகாலனின் அம்மாவாக ஜான்சிராணி உள்ளார்.


இந்நிலையில் ஜான்சிராணியாக நடிக்கும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் சென்னையில் நடந்த ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரமங்கை வேலுநாட்சியாராக வேடமிட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement