• Jul 26 2025

சீரியல் நடிகை மேக்னாவை நியாபகம் உள்ளதா?- தற்போது எப்படி உள்ளார் பாருங்க..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

2013ஆம் ஆண்டு விஜய்டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வம் தந்த வீடு. சீதாராம் சக்ரவர்த்தி என்பவர் இயக்கிய இந்த தொடர் 2017ம் ஆண்டு வரை ஓடியது.

மேலும் இதில் மலையாள சினிமா நடிகை மேக்னா என்பவர் முக்கிய நாயகியாக நடித்து வந்தார், இல்லை இல்லை அழுதார் என்று தான் கூற வேண்டும். பாதி சீரியல் இவரது அழுகையிலேயே சென்றுவிட்டது.


மேலும் இந்த தொடருக்கு பின்னர் அவர் பொன்மகள் வந்தாள், அவளும் நானும் போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.

மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் பிஸியாக சீரியல்களில் நடித்துவரும் போதே 2017ம் ஆண்டு டோனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் இருவரும் 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார்கள்.


விவாகரத்திற்கு பின்னர்  நடிகை மேக்னா தொடர்ந்து மலையாள சினிமா தொடர்களில் நடித்த வண்ணம் உள்ளார்.



Advertisement

Advertisement