• Jul 25 2025

குஷ்பூவுக்கு இவ்வளவு அழகான தம்பி இருக்காரா? - என்னது இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் வருஷம் பதினாறு படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் நடிகை குஷ்பூ.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கின்றார்.

இவ்வாறு பிரபலமாக பிசியாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குநருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும்தொடர்ந்து படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வரும் குஷ்பூ சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் அதித ஆர்வம் காட்டி வருகிறார். 


அதுமட்டுமின்றி குஷ்பூ அவ்னி பிக்சர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான அண்ணாத்த படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.


 இதனைதொடர்ந்து தற்போது சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் சேனலில் மீரா எனும் தொடரை இயக்கி அதில் நடித்தும் வருகிறார். இது ஒரு புறம் இருக்க குஷ்பூ தனது இணைய பக்கத்தில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஆண் ஒருவருடன் உள்ளார். அது யார் தெரியுமா அது வேறு யாருமில்லை குஷ்பூவின் தம்பி தான் அவருடைய பெயர் அப்துல்லா இவரும் நடிகர் தானாம்.


 அந்த வகையில் இவரது நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு மாயா மோகினி எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இவ்வாறு இருக்கையில் பல வருடங்கள் கழித்து குஷ்பூ தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது குஷ்பூவுக்கு இவ்வளவு அழகான தம்பி இருக்காரா அதுவும் அவரும் ஹீரோவா என வாயடைத்து போயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement