• Jul 24 2025

பயில்வான் ரங்கநாதனை மேடையில் வைத்து பங்கமாக கலாய்த்த சந்தானம் - டிடி ரிட்டர்ன்ஸுக்கு இப்படியொரு அர்த்தம் இருக்கா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ராம்பாலாவுடன் இணைந்து தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 படங்களில் நடித்த சந்தானம் இந்த முறை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி நடித்துள்ளார்.

பேய் வீட்டில் நடக்கும் கேம் ஷோவில் கலந்து கொள்ள காதலியுடன் செல்லும் சந்தானம் எப்படி தப்பித்து வருகிறார் என்பதை வழக்கம் போல காமெடி கலாட்டாவாக உருவாக்கி உள்ளனர்.

தில்லுக்கு துட்டு என்கிற டைட்டில் வைத்து சந்தானம் நடித்த படங்கள் மட்டுமே அவருக்கு கமர்ஷியலாக போட்ட காசை திரும்பிக் கொண்டு வந்திருக்கிறது. அந்த சென்டிமென்ட்டை தொடரும் விதமாகவே இந்த படத்துக்கு டிடி ரிட்டர்ன்ஸ் என பெயர் வைத்துள்ளார்.

வழக்கம் போல இந்த படத்திலும் மொட்டை ராஜேந்தரை நடிக்க வைத்திருக்கிறார். மேலும், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த காமெடி பேய் படம் வரும் ஜூலை 28 திரைக்கு வருகிறது.

பயில்வான் ரங்கநாதனை கலாய்த்த சந்தானம்: பிரஸ்மீட்டில் நடிகர் சந்தானத்தை பார்த்து கேள்வி எழுப்பிய பயில்வான் ரங்கநாதன் டிடி ரிட்டர்ன்ஸ் என்றால் விஜய் டிவி திவ்யதர்ஷினி ரிட்டர்ன்ஸான்னு கேட்டதும், டெபாசிட் பண்ண துட்டு திரும்ப வரும்னு தான் டிடி ரிட்டர்ன்ஸ்னு வைத்திருக்கிறோம் என பதில் அளித்த சந்தானம் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து தலைப்பு குறித்து கேள்விகளை எழுப்ப, டிரங்க் அண்ட் டிரைவ் கூட டிடி தான் என ஒரே போடாக போட்டு கலாய்த்துள்ளார்.

மற்ற பத்திரிகையாளர்கள் சிலர், டிரங்க் அண்ட் டிரைவ் கேஸ்ல போலீஸ் நிறைய பிடிக்கிறாங்க என்றதும், நீங்க வேணும்னா என் பெயரை சொல்லுங்க, என பார்த்தா ஸ்டைலில் சட்டென பதிலடி கொடுத்து பேசி கலகலப்பாக்கினார் சந்தானம்.


Advertisement

Advertisement