• Jul 24 2025

சீரியல் நடிகை ஸ்ரீதுர்காவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா?- அடடே இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!


90களில் ஒளிபரப்பான சீரியல்கள் எல்லாமே நல்ல ரீச், அதில் நடித்தவர்களும் மக்களிடம் பிரபலமானார்கள். அப்படி சிறுவயதில் இருந்தே சினிமா, சீரியல் என இரண்டிலும் நடித்திருப்பவர் ஸ்ரீதுர்கா.மாடலிங் துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் 10 வருடங்களுக்கு மேலாக இவர் சின்னத்திரையில் கலக்கியுள்ளார்.

2015ம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்த ஸ்ரீதுர்கா அதன்பிறகு உறவுகள், தியாகம், முந்தானை முடிச்சு, அலைகள், சிகரம் போன்ற பல தொடர்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தார்.


சன் டிவியை தாண்டி ஜெயா, கேப்டன் போன்ற தொலைக்காட்சிகளிலும் சீரியல்கள் நடித்துள்ளார்.5 வயதில் இருந்தே சினிமாவில் பணியாற்றி வரும் ஸ்ரீதுர்கா இப்போது அவ்வளவாக நடிப்பது இல்லை. இந்த நிலையில் தான் நடிகை ஸ்ரீதுர்காவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஸ்ரீதுர்காவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் இவர் இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்துாரப்பூவே என்னும் சீரியலில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement