• Jul 25 2025

வனிதா விஜயகுமார் யூடியூப்-இல் மட்டும் இவ்வளவு சம்பாதிக்கிறாரா? அவரே கூறிய தகவல் இதோ...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவில் பங்கேற்றபிறகு மீண்டும் பேசப்படும் நடிகை ஆகிவிட்டார். அவரது திருமண சர்ச்சை பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் வனிதா youtube சேனல் தொடங்கி கொரோனா லாக்டவுன் நேரத்தில் அதிக அளவு வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டியில் தான் youtube மூலமாக எவ்வளவு சம்பாதிக்கிறார் என வெளிப்படுத்தி இருக்கிறார்.

தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் ருபாய் வரும், அதுவே சரியாக கன்டென்ட் போடாமல் இருந்தால் சில நேரங்களில் 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று கூட மாத வருமானம் இருந்திருக்கிறது என வனிதா தெரிவித்தார்.


Advertisement

Advertisement