• Jul 24 2025

நடிகைகளுக்கு ட்ஃப் கொடுக்கும் லுக்கில் இருக்கும் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் தான் விஜே மகேஸ்வரி.தந்தையின் ஆதரவின்றி தாயின் அரவணைப்பில் வளர்ந்த இவர், தன்னுடைய படிப்பு செலவு மற்றும் குடும்ப பொறுப்புகளையும் ஏற்கும் நிலையில் இருந்ததால், படித்துக் கொண்டே தொகுப்பாளர் பணியை வெற்றிகரமாக செய்தார்.


படித்து முடித்த பின்னர், தொலைக்காட்சியை இருந்து மாற நினைத்த இவருக்கு, அடுத்தடுத்து சின்னத்திரை மற்றும் சில வெள்ளித்திரை படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், முழுநேர நடிகையாக மாறினார்.


திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலகினார். இருப்பினும் மகன் பிறந்து சில மாதங்களிலேயே கணவருக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றார்.கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதால் வேறு வழி இன்றி மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.  


மேலும் திருமணத்துக்கு பின்னர் இவர் நடித்த சீரியல்கள் மற்றும் தொகுத்து வழங்கிய அதிர்ஷ்ட லக்ஷ்மி போன்ற நிகழ்ச்சிகள் மகேஸ்வரிக்கு நல்ல ரீச் கொடுத்தது.இது தவிர பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் பங்குபற்றி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவ்வப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்களை சந்தித்து நட்பு பாராட்டி வரும், விஜே மகேஸ்வரி, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி... தன்னுடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


இளம் நடிகைகளுக்கு ட்ஃப் கொடுக்கும் லுக்கில் இருக்கும் விஜே மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

Advertisement

Advertisement