• Jul 24 2025

இப்படிக் கேள்விகளை கேட்காதீங்க- மிகவும் வேதனையளிக்கின்றது- கவலை தெரிவித்த நடிகை ஜான்வி கபூர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை தான் ஜான்வி கபூர். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகளும் ஆவார்.இவர் ஹிந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் குறித்த வதந்திகளும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதாவது இவர் நைடிகர் ஆர்யாவுடன் இணைந்து பையா 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.ஆனால் இதற்கு இவரின் தந்தையும், பிரபல தயாரிப்பாளரான போனி கபூர், 'ஜான்வி குறித்து வந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானது. அதை நம்ப வேண்டாம்' என்று கூறினார்.


குறுகிய காலத்திலேயே ஜான்வி கபூருக்கு பல பட வாய்ப்புகள் வருவதற்கு காரணம் அவரின் குடும்ப பின்னணி தான். மேலும் அவருக்கு படத்தில் சரியாக நடிக்க தெரியாது என்று பல விமர்சனங்கள் எழுந்தது.

பேட்டி ஒன்றில் இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ஜான்வி கபூர், " நீங்கள் எவ்ளோ தான் திறமையை வெளிப்படுத்தினாலும் உங்கள் குறைகளை மட்டும் தான் கண்டுபிடிப்பார்கள்".


"யாராவது என்னுடைய வேலையை பாராட்டி கருத்துக்களை தெரிவித்தால் நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். சிலர் என் நடிப்பை மேம்படுத்தி கொள்ளுமாறு கூறினால் அவர்களின் கருத்தையும் மதித்து ஏற்றுக்கொள்வேன்.

உனக்கு தான் நடிப்பு சரியாக வரவில்லையே, பிறகு ஏன் முயற்சி செய்கிறாய்? போன்ற கேள்வியை பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். இது போன்ற கேள்விகள் மிகவும் வேதனை அளிக்கிறது" என்று ஜான்வி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


Advertisement

Advertisement