• Jul 25 2025

அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டு நடிகைகளை சாவடிக்காதீங்க.. கடுப்பான அயல் காயத்ரி!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேட்டு நடிகைகளை உடம்பாலும் சாவடிக்காதீங்க என்று நடிகை காயத்ரி கூறியுள்ளார்.சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.அத்தோடு இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தில், வாழ வரும் கதாநாயகி ஜனனி, ஆணாதிக்க குணத்தோடு இருக்கும் குணசேகரனுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பதே கதையாகும்.

அத்தோடு தனித்துவமான கதையோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மேலும் இந்த சீரியல் சமீபத்தில் இணைந்தவர் தான் விஜே காயத்ரி. இவர் இந்த சீரியலில் குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும், கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சீரியல் மூலம் பிரபலமான காயத்ரி, அயலி என்ற வெப் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்தோடு கடவுள் நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கம்,குழந்தை திருமணம் என்பன போன்ற கட்டுகளை உடைத்து லட்சியத்தை நோக்கி நடைபோடும் பெண்ணை மையமாக வைத்து அயலி தொடர் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தோடு 8 எபிசோடுகள் கொண்ட இந்த சீரியல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.

மேலும் இதில் முக்கியமான ரோலில் ஆண்களின் நெற்றியில் அடிப்பது போல சூப்பரான வசனம் பேசியிருந்தார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த காயத்ரியிடம் சினிமா குறித்து பல விஷயம் கேட்கப்பட்டது. எதிர்நீச்சல் ஜான்சி ரோலில் நடிப்பதற்காக இயக்குநர் திருச்செல்வத்திடம் புகைப்படத்தை அனுப்பினேன் போட்டோவை பார்த்துவிட்டு இவங்க ஸ்டைலாக இருக்காக இந்த ரோலுக்கு இவங்களுக்கு செட் ஆகாது என்றார். அதன் பின்னர் அயலி படத்தோட புகைப்படத்தை அனுப்பினேன் அப்போதுதான் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

எனினும் இதைத்தொடர்நது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த கேள்வி பதில் அளித்த காயத்ரி, யார் யார்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணா யாருக்கு என்ன பிரச்சனை, அவங்க அட்ஜஸ்மெண்ட் செய்துவிட்டு போன உங்களுக்கு என்ன வந்துச்சு. அது அவளோட விருப்பம். நடிகையை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேட்க தோணுதா, ஏற்கனவே நடிகை நொந்து போய் இருக்காங்க அவங்களை இதை கேள்வி கேட்டு மனதாலும் உடம்பாலும் சாவடிக்காதீங்க என்று நடிகை காயத்ரி கடுமையாக திட்டினார்.

Advertisement

Advertisement