• Jul 23 2025

அதை வைத்து முடிவு பண்ணக்கூடாது.. ஃபர்ஹானா பட சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்ன தகவல்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

எனினும் தற்போது இவர் நடிப்பில் ஃபர்ஹானா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அத்தோடு அந்த டீசரில் சில இஸ்லாம் மதத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பல கருத்துக்கள் எழுந்தது.


இவ்வாறுஇருக்கையில் இது குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஃபர்ஹானா திரைப்படம் இஸ்லாம் மதத்திற்கு எதிரான படம் இல்லை. இப்படம் இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையில் தான் இருக்கும்.

இந்த படத்தில் சர்ச்சைக்குரியவகையில் கருத்துக்கள் எதுவும் வரவில்லை. படத்தின் டீசரை வைத்து முடிவு பண்ணக்கூடாது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.   


Advertisement

Advertisement