• Jul 23 2025

கண்ட நாய்கள் எல்லாம் கேட்டால் போகக் கூடாது- கொந்தளித்த ரேகா நாயர்- என்ன காரணம் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில்  வம்சம்,ஆண்டாள் அழகர்,பகல் நிலவு, பால கணபதி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ரேகா நாயர். இதனைத் தொடர்ந்து இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.

பல பேட்டிகளில் இவர் தொடர்ந்து சினிமா குறித்து பல சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் பெண்களுக்கு இருக்கும் அவல நிலை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சினிமாவில் ஹீரோயின்களுக்கு அட்ஜெஸ்மெண்ட் இருக்குறது உண்மையா? என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த ரேகா, “கண்டிப்பாக சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது. அதை கதாநாயகிகளும் ஏற்றுக்கொள்கின்றனர். பெரும் நட்சத்திரம் ஆகலாம், நிறைய பணம் கிடைக்கும், சென்னையில் ஒரு வீடு வாங்கலாம் என்பதற்காக இதை எல்லாம் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஏனெனில் அவர்கள் கூறாமல் இந்த விஷயங்கள் வெளி உலகிற்கு தெரியாது. ஆனால் இந்த மாதிரியான தொழில் செய்வதற்கு வேறு இடங்கள் உள்ளன. அங்கு சென்று அவர்கள் இதை செய்யலாம். என் வாழ்க்கையில் தண்ணி அடிக்க கூடாது, கண்ட நாய்ங்க கூட படுக்க கூடாது என என் வாழ்க்கையை நான்தான் முடிவு செய்கிறேன். கதாநாயகிகளும் அப்படிதான் இருக்க வேண்டும்” என ரேகா நாயர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement