• Jul 25 2025

''உப்பு மட்டும் அதிகம் எடுத்துக்காதீங்க''…சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அறிவுரை!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை நேற்று நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார் . அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால பயணத்தை விளக்கும் கண்காட்சியை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் தொடங்கி வைத்தார். 

இந்த கண்காட்சி இன்று முடிவடைகிறது. இந்நிலையில், நேற்று கண்காட்சியை நேரில் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டார்.

சில புகைப்படங்களுக்கு நடுவில் புகைப்படம் கூட எடுத்தார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. உணவில் உப்பை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல்நலம் பாதித்துவிடும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், அரசியலுக்கு வராதது ஏன் என்றும் விளக்கமளித்தார். அப்போது, அதிக மது எடுப்பது கிட்னியை பாதிக்கும், அதிக எண்ணெய் உட்கொண்டால் இதயம் பாதிக்கும். ஆனால் உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கும். அதனால் சரியான அளவு எடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.


Advertisement

Advertisement