• Jul 24 2025

காமெடி என்ற பெயரில் எதுவும் கஷ்டப்படுத்தாதீங்க- ஷிவினை அழவைத்த அமுதவாணனை திட்டிய விக்ரமன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டிற்குள் தற்பொழுது 9 போட்டியாளர்கள் மாத்திரமே மீதமாக உள்ள நிலையில்  Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 


இப்படி ஒரு சூழ்நிலையில் கதிரவனின் கேர்ள் பிரண்ட் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தர, இதனைக் குறிப்பிட்டு சில போட்டியாளர்கள் ஷிவினை ஜாலியாக கிண்டல் செய்து பேசியும் வருகின்றனர். அதன்படி அமுதவாணன் மற்றும் ADK உள்ளிட்டோர் ஷிவினை சுற்றி வந்து சோக பாடல்களை பாடியும் வருகின்றனர்.

அதிலும், ஷிவின் செல்லும் இடம் எல்லாம் சென்று தொடர்ந்து காதல் தோல்வி பாடல்களை பாடியும் வருகிறார் அமுதவாணன். மறுபக்கம், ஷிவினிடம் நிறைய நம்பிக்கை வார்த்தைகள் பேசி மீண்டும் அவரை போட்டி மனநிலைக்குள் கொண்டு வரும் வேளையிலும் விக்ரமன் ஈடுபட்டிருந்தார்.


இதற்கு மத்தியில், ஷிவினை சுற்றி சுற்றி வந்து பாடிய அமுதவாணனிடம் பேசிய விக்ரமன், அவரது உணர்வை அவர் பார்த்துக் கொள்வார் என்றும், நாம் நடுவே சென்று காமெடி என்ற பெயரில் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார். மேலும், ஷிவினே அதை கையாண்டு கொள்வார்கள் என்றும் நடுவே அவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் நாம் போக வேண்டும் அவரது எமோஷன்களை அவரே கையாள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement