• Jul 23 2025

அந்த 10 நிமிஷம் தான் முக்கியம் மிஸ் பண்ணிடாதீங்க- லியோ படத்தின் சஸ்பென்ஸை உடைத்த லோகேஷ் கனகராஜ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி முதல் காட்சி 9:00 மணிக்கு தான் ஆரம்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருந்தாலும் படம் ரிலீஸிற்காகக் காத்திருக்கின்றனர். மேலும் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லோகேஷ் கனகராஜ் தனியாக் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்,பேசிய விடயம் வைரலாகி வருகின்றது.


பொதுவாக படம் தொடங்கும் போது சற்று தாமதமாகவே பலர் தியேட்டருக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. படம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் கழித்து எல்லாம் மக்கள் தியேட்டருக்குள் வருவார்கள். ஆனால் இந்த படத்தின் முதல் 10 நிமிடங்கள் முக்கியமானது என்றும் அதனை மிஸ் செய்ய வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு அந்த முதல் காட்சியில் இருப்பதாகவும் அந்த அனுபவத்தை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் முன்கூட்டியே தியேட்டருக்கு வந்து படத்தை ரசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் படத்தில் எந்த ஒரு காட்சியையும் தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக அறிவித்த நேரத்தை விட கூடுதலாக 10 நிமிடங்கள் கழித்து படத்தை வெளியிடுவது வாடிக்கையாக உள்ளது.


ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் கதைதான் லியோ என்றால் ஆரம்பத்தில் ஸ்லோவான தொடக்கம் தானே இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்திலேயே அதிரடி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement